மட்டக்களப்பு வலயம் மாணவர்களின் பெறுபேறு அடைவு மட்டத்தில் வீழ்ச்சி
இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மட்டக்களப்பு கல்வி வலயம் சென்ற ஆண்டினை விட வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரீட்சை பெறுபேறுகளிலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொ. உதயரூபன் சுட்டிக் காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு நகர்ப்புறப் பாடசாலை மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தில் வீழ்ச்சி ஏற்பபட்டுள்ளதை சுட்டிக் காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொ. உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆரம்ப கல்விக்குப் பொறுப்பாக 2 உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் 3 சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் சேவையிலுள்ளார்கள்.
சமீபத்தில் வெளியாகிய ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி பின்தங்கிய கோட்;டங்களாகிய ஏறாவூர் பற்று, மண்முனை ஆகியவற்றில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பரீட்சை பெறுபேறும் உயர்;வடைந்துள்ளது.
அதேவேளை நகர்ப்புறப் பாடசாலைகளைக் கொண்ட மண்முனை வடக்கு கோட்டத்தின் பரீட்சை பெறுபேறுகள் சென்ற ஆண்டை விட கடும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இதேவேளை, ஆரம்ப கல்விக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பு தொடர்பாக அண்மையில் வலயப் பணிப்பாளருடனான சந்திப்பின் போது சங்கம் வினவியுள்ளது.
இந்நியமனங்கள் தொடர்பாக மாகாணக் கல்விச் செயலாளர் பொறுப்புக்கூற வேண்டும்.
மேலும் சென்ற ஆண்டை விட குறிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் கிட்டத்தட்ட 50 மாணவர்களின் பெறுபேறு வீழ்ச்சியடைநதுள்ளது.
சென்ற ஆண்டில் க.பொ.த.சாதாரண தர பரீட்சை பெறுபேற்றுப் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலை மாணவர்களும் முதலிடத்தை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரீட்சைப் பெறுபேறுகள் வலயத்தின் வினைத்திறனற்ற அரசியல் நியமனங்களையும், வெளிப்படைத் தன்மையற்ற இடமாற்றங்கள், பழிவாங்கல்களை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments