பெரு நாட்டில் இரவு நேரத்தில் நடந்த சோகம்! 52 பேர் பலி..!!
பெரு நாட்டில் மலை சரிவிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பெருவின் சான்டா தெரசா மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழி விடுவதற்காக, ஒதுங்கிய போது மலை சரிவில் உருண்டு சவுபிமாயோ நதியில் விழுந்தது. நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பேருந்தில் இருந்த பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 52 பேர் பரிதாபமாக பலியாயினர். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால், யாரையும் மீட்க முடியவில்லை.
0 comments: