அம்பாரை மாவட்ட செயலகத்தில் முதன் முறையாக நவராத்திரி விழா
அம்பாரை மாவட்ட செயலக இந்து மன்றம் ஏற்பாடு செய்த நவராத்திரி விழா நேற்று (2013.10.14) மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் நீல் த அல்வீஷ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு இன மத பேதம் இன்றி செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை சிறப்பஞ்சமாகும். மேலும் வரலாற்றில் முதன் முறையாக இங்கு நவராத்திரி விழா நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments