Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய நடிகை திரிஷா!

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த பட விழாவுக்கு சேர்ந்தே சென்றார்கள். அங்கு நடந்த விருந்தில் கைகோர்த்து நெருக்கமாக நடனம் ஆடியது சக நடிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த படங்களும் இணைய தளங்களில் பரவின.  இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் இதற்காகவே புதுப்படங்களில் நடிப்பதை திரிஷா நிறுத்திவிட்டார் என்றும் ஆந்திர பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்தான் கோவா கடற்கரையில் திரிஷா, ராணா வலம் வந்த படங்கள் வெளியாகியுள்ளன. ஓட்டல் விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிறகு திரிஷாவை ராணா பாதுகாப்பாக அழைத்து செல்வது போல் இப்படங்கள் உள்ளன. இதன் மூலம் இருவரும் ஒன்றாக சுற்றுவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments