Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கொத்தியாபொலை பாடசாலை மாணவி ஆங்கில போட்டியில் சாதனை



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,கொத்தியாபொலை கலைவாணி வித்தியாலய தரம் 8இல் கல்வி பயிலும் ப.பிகீரதி என்ற மாணவி ஆங்கில போட்டியொன்றில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

வவுணதீவு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள இப்பாடசாலையில் இருந்து முதன்முறையாக தேசிய ரீதியான போட்டிக்கு இந்த மாணவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவியை திருமதி பி.திரவியராஜா திருமதி த.தினேஸ்குமார் ஆகிய ஆசிரியைகள் தயார்படுத்தினர். 

இப் பாடசாலைக்கு மகிழடித்தீவைச் சேர்ந்த மூத்ததம்பி சிவகுமாரன் அவர்கள் அதிபர் சேவை தரம் பெற்று இவ்வருட ஆரம்பத்தில் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றார்.

வசதியும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைக்கும்போது பின்தங்கிய பகுதி மாணவர்களும் சாதனை படைப்பர் என்பதை பகிரதியின் சாதனை பறைசாற்றுகின்றது.

Post a Comment

0 Comments