13 வயதான முஸ்லிம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் சாரதி ஒருவரை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர். அனுராதபுரம் நகரின் மூன்றாம் பிரிவு பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் சிறுமி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 25 ஆம் திகதி செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். சிறுமியை கடத்திச் செல்ல சந்தேக நபர் பயன்படுத்திய வான் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் இருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளர் ஒருவரின் சாரதியாக பணியாற்றி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
|
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி பாட்டியுடன் கோபித்து கொண்டு இரவு 9.30 அளவில் வீட்டுக்கு வெளியில் வீதிக்கு வந்த போது, வானில் வந்த சந்தேக நபர் சிறுமியை பலவந்தமாக வானில் ஏற்றி பாழடைந்த இடம்ஒன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இதன் பின்னர் சந்தேக நபர் சிறுமியை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
|
0 Comments