சுற்றுலா தொழில் துறையுடன் இலங்கை பெண்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கருக்கலைப்பு மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என சுதந்திரத்தின் மேடை அமைப்பின் இணை ஏற்பட்டாளரும் பெண்கள் அரசியல் பீடத்தின் பணிப்பாளருமான நிமால்கா பெர்ணான்டோ தெரிவித்தார். அதிகரித்து வரும் நிலைமையை பார்த்தால் சுற்றுலாத் துறையை ஓய்வெடுக்கும் கலாசாரம் என்றே கூறவேண்டும். சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காகவே வருகின்றனர். இதில் மறு பகுதியான பாலியல் ரீதியான தேவைகளை அவர்கள் நாடுகின்றனர். இதனால் இலங்கையில் பல பெண்கள் பாலியல் சேவையில் ஈடுபட நேர்ந்துள்ளது.
|
இந்த நிலைமையில் பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடிய பெண்களின் உடல் நல பாதுகாப்பை கருதி நாட்டில் கருக்கலைப்பு மற்றும் விபச்சாரம் சட்டரீதியானதாக்கப்பட வேண்டும் என்றார்.
|
0 Comments