Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழைச் சேர்ந்த நபர் தமிழகத்தில் தற்கொலை - இரு மனைவிகளினதும் பிரிவே காரணம்

மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர். கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதான நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 26 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் விஜயப்பிரியா (வயது-7), கவிப்பிரியா (வயது-6), சிநேகப்பிரியன் (வயது-5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலைச்செல்வி என்பவரை நாகேஸ்வரன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு பவீஸ்னா என்ற 11 மாத குழந்தை உள்ளது. இவரும் கடந்த 25ம் திகதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் சாரத்தில் சேலையால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments