Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கைதடியில் வட மாகாண சபையின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாண சபையின் புதிய கட்டடம் மற்றும் பெயர் பலகையை வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் இன்று காலை வைபவரீதியாக திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கட்டட திறப்பு விழாவில், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் நிதி ஒதுக்கீட்டில் சுகாதார தேவையுடைய 36 பேருக்கு சிவி விக்னேஸ்வரனால் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 51 பேருக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 36 பேர் உத்தியோகப்பூர்வ வைபவத்தில் அதை பெற்றுக் கொண்டனர்.

Post a Comment

0 Comments