Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய அணிகளில் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் - ஶ்ரீரங்கா

தேசிய அணிகளில் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார். தமிழ் மொழி பேசும் விளையாட்டு வீர வீராங்கனைகளை தேசிய அணிகளில் காணக் கிடைப்பதில்லை. தேசிய அணிகளில் தமிழ் பேசும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் உள்வாங்கப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் பட்மின்டன் விளையாட்டு மைதானம் ஒன்றை கூட அமைக்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சட்ட மூலம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நுவரெலியாவில் புதிய மைதானமொன்று அமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்த கிரிக்கெட் அணி ஒன்றை தெரிவு செய்து, ஓரளவு திறமையான ஐந்து பேரை தெரிவு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments