இலங்கை மகளிர் கிரிக்கட் அணியில் இணைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு, மகாஜனக்கல்லூரி மாணவி ஜடா தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள சுற்றுப்போட்டியில் பங்குபற்றச்செல்லும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி கிரிக்கட் அணி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிரிக்கட் அணி ஊடாக தேசிய ரீதியில் தனது திறமையினை வெளிக்காட்டியதன் காரணமாக இலங்கை மகளிர் கிரிக்கட் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த வாரம் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணியில் ஜடா இணைக்கப்பட்டுள்ளார்.

0 Comments