யாழ்.நாச்சிமார் கோவிலடியில் உருக்குலைந்த நிலையில் இருந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கே.கே.எஸ் வீதியில் உள்ள நாச்சிமார் கோவில் தேர் கொட்டகையிலிருந்தே மேற்படி உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடலம் இருக்கும் நிலையினைப் பார்க்கும் போது குறித்த பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேலும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் வீதிகளில் நின்று சேதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்படி நாச்சிமார் கோவிலடியிலும் சிறிலங்கா இராணுவத்தினர் இரவு நேரங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு நிற்பதனை நிறுத்தியுள்ளனர்.
மேற்படிச் சம்பவத்தில் இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
0 Comments