Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!

இலங்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை, அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார பாராளுமன்ற உறுப்பினர் குழுவினால் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை விவகாரங்களை மேம்படுத்துவதற்கு உயர்மட்ட இரு தரப்பு முனைப்புக்களை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல்வேறு அமைப்புக்களின் ஊடாகவும் இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
  
2009ம் ஆண்டு கரீபியின் தீவுகளில் ஒன்றான போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது 2013ம் ஆண்டில் இலங்கையிலும் 2015ம் ஆண்டில் மொரிசியஸ் தீவுகளிலும் அமர்வுகளை நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக பிரித்தானியா அறிவித்துள்ளது. மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பில் பல தடவைகள் பிரித்தானிய அரசாங்கம இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாக்க பிரித்தானியா முனைப்பு காட்டவத் தவறியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments