அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் !
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் நேற்று மாலை இடம்பெற்ற திடீர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனமொன்றை காவல்துறையினர் வேகமாக துரத்திச் சென்றதகாவும் இதையடுத்தே குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம் அல்ல. ஒரு தனிப்பட்ட நபருடன் தொடர்புடையது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான பெண் ஒருவர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சில ஊடகங்கள் அப்பெண் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் கடற்படைத் தளத்திற்கு அருகாமையில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக அனைத்து அரசு துறை நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில், சம்பளம் கிடைக்கப்பெறாத விரக்தியில் நேற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமோ என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments