Home » » மகிந்த அரசாங்கம் தமிழ் இனத்தை மாத்திரமல் மதத்தையும் அழிக்கிறது – சர்வதேச இந்து குருமார் ஒன்றியம்.

மகிந்த அரசாங்கம் தமிழ் இனத்தை மாத்திரமல் மதத்தையும் அழிக்கிறது – சர்வதேச இந்து குருமார் ஒன்றியம்.

மகிந்த அரசாங்கம் தமிழ் இனத்தை மாத்திரமல் மதத்தையும் அழிக்கிறது – சர்வதேச இந்து குருமார் ஒன்றியம்.

சிங்களம் இனவாதத்தை மாத்திரம் சிறுபான்மையினர் மீது காட்டவில்லை. அதற்கப்பால் மதவாதத்தையும் முழு மூச்சுடன் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொண்டுவருவதாக சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு பகுதியில் இந்து ஆலயங்களில் இடம்பெறும் நாசகாரச் செயல்களை கண்டித்து ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்களில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இந்து மத்தின் தூய்மைத்தன்மையை கொச்சைப்படுத்துவதுடன், விக்கிரகங்களையும் நாசம் செய்து பாராம்பரியமான இந்துக்களின் வரலாற்றை அழிக்க கங்கணம் கட்டியுள்ளதாக சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
சிறீலங்கா ஒரு பௌத்த நாடு இங்கு ஏனைய இனத்தவர்கள் தங்கள் மதச் சம்பிராயங்களை கடைப் பிடிக்க முடியாதவாறு தென்னிலங்கை மதவாதிகளும், சிறீலங்காவின் படைகளும் திட்டமிட்ட நாசகாரச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்து ஆலயங்கள் மாத்திரமின்றி, கிறிஸ்த்தவ தேவாலயங்கள், பள்ளிவாயல்கள் என மாற்று மதத்தவர்களின் சமயச் சின்னங்களை நாசம் செய்வதனுடாக சிறீலங்கா ஒரு தனியான பௌத்த நாடு என்பதை சித்தரித்துக் காட்டுவதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் பல ஆலயங்களில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் விக்கரங்கள் நாசப்படுத்தல்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்நிலையில், சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து தண்டனை வழங்குவதற்கு பதிலாக> மௌனமாக இருப்பதனால் இவர்களின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த மிகவும், பிரசித்தி பெற்ற ஆலயங்களை இனவாதிகள் குறிவைப்பதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான இடங்களை அடியோடு அழித்துவிடுவதற்கான செயற்பாடுகளில் கொழும்பு அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகின்றனது என்பது இவ்வாறான நாசகார செயற்பாடுகளினுடாக மிகவும் துள்ளியமாக தெரியவருகிறது.
மன்னர் ஆட்சிக் காலத்தில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட இந்து மதத்தவரின் சின்னங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுவருகின்றமை எம்கண்ணுடாக பார்க்க முடிகிறது. தென்பகுதியுடன் நின்றுவிடாது அதனை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிக்கும் விஸ்த்தரித்துள்ளனர்.
ஆலயங்கள் சிதைக்கப்படும் அதே சமயத்தில் என்றும் பௌத்த விகாரைகளே இல்லாத இடங்களில் மிகவும் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் முளைக்கின்றன. இவ்வாறான செய்ற்பாடுகளினுடாக ஒரு போதும் இனங்களுக்கிடையில் ஒன்றுமை, நல்லிணக்கங்களை ஏற்படுத்த முடியாது. வெளி உலகுக்கு ஒரு பேச்சைப் பேசும் மகிந்த அரசு உள்ளுரில் அதற்கு நேர்மாறான செயற்களில் ஈடுபடுகின்றனர்.
வடபுலத்தில் ஆயிரக்கணக்கான முப்படைகளும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்துக்களின் ஆலயங்களை குறி வைத்து தாக்குதல் நடாத்துவதும், கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதையும் நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு குடாநாட்டில் நிலை கொண்டுள்ள முப்படைகளுமே பொறுப்புக் கூறவேண்டும்.
இதுவரையில் இடம்பெற்ற சம்வங்கள் தொடர்பில் நிவில் நிர்வாகத்தை பாதுகாக்கும் காவல்துறையினரால்  எவரும் கைது செய்யப்படாத நிலையில், இனியும் எவரும் கைது செய்யப்படப் போவதில்லை.
இவ்வாறான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இந்துமதத்தின் புணிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அனைத்துலக சமூகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |