Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது

வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது



பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா நகருக்கு செய்தி பத்திரிகை ஒன்றை வாங்க சென்றிருந்த தமிழ் மாணவனுக்கு சிங்களம் கற்று தருவதாக கூறி சந்தேக நபரான பிக்கு மாணவனை பலவந்தமாக முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் சென்றுள்ளார். மதவாச்சி தாவகுளம் பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அழைத்துச் சென்று மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர், குறித்த மாணவனை பஸ்ஸில் ஏற்றி விடுமாறு விகாரையில் சேவையாற்றி வந்த சிவில் பாதுகாப்பு படை வீரரிடம் கூறி மாணவனை அனுப்பியுள்ளார். மாணவன் சிங்கள மொழி அறியாதவர். சிவில் பாதுகாப்பு படை வீரர் சற்று தமிழில் பேசக் கூடியவர். அவர் விகாரைக்கு வந்த காரணத்தை மாணவனிடம் வினவியுள்ளார்.


பிக்கு தன்னை பலவந்தமாக அழைத்து வந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை மாணவன் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிவில் பாதுகாப்பு படை வீரர் சம்பவம் தொடர்பில் விகாரையின் பங்களிப்பு சபைக்கு அறிவித்துள்ளார். பங்களிப்பு சபையின் உறுப்பினர்கள் பிரதேசத்தில் உள்ள தமிழ் தெரிந்த ஒருவரை அழைத்து மாணவனிடம் நடந்ததை கேட்டறிந்துள்ளனர்.

பிக்குவால் தனக்கு நேர்ந்தவற்றை மாணவன் அவர்களிடம் கூறியதை அடுத்து பிரதேசவாசிகள் சம்பவம் பற்றி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்தே புத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments