Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நுவரெலியாவில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள இளவரசர் சார்ள்ஸ்

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் இங்கிலாந்து இளவரசர் நுவரெலியாவில் உள்ள பெட்ரோ தேயிலை தோட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 1954 ம் ஆண்டு மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும் இளவரசர் சார்ள்ஸின் தந்தையுமான கோமகன் பிலிப் இலங்கைக்கு விஜயம் செய்த போது பெட்ரோ தோட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனது விஜயத்தின் ஞாபகார்த்தமாக தேயிலை செடி ஒன்றையும் நாட்டியிருந்தார். இந்த தேயிலை செடியில் இருந்து பறிக்கப்பட்ட தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை தேனீர் கடந்த வருடம் நடைபெற்ற மகாராணியின் வைர விழாவில் 40 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தனது தந்தையின் விஜயத்திற்கு பின்னர் 59 வருடங்கள் கழித்து இளவரசர் சார்ள்ஸ் இந்த தோட்டத்திற்கு விஜயம் செய்வது இலங்கையில் தேயிலை தொழிற்துறைக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என டெய்லி மெயில் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments