Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லாவும், அவரது ஆதரவாளர்களும் ஆடிய நாடகத்தின் வெளிப்பாடே எனது கைது

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும், அவரது ஆதரவாளர்களும் ஆடிய நாடகத்தின் வெளிப்பாடே தனது கைது ஆகுமென வாரஉரைகல்லின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சர்வதிகார போக்கு, பித்தலாட்டம் உள்ளிட்ட அருவருப்பான செயற்பாடுகளுக்கு எதிராக நான் பகிரங்கமாக குரல்கொடுத்தேன். அவருடைய மகனுடைய அசிங்ககரமான செயற்பாடுகளையும் அம்பலப்படுத்தினேன். இதனால் சீற்றமடைந்த ஹிஸ்புல்லா அராஜக செயற்பாடுகளை முன்னெடுத்து என்னை கைதுசெய்யச் சொல்லி பொலிஸாரை ஏவிவிட்டுள்ளார்.
அதன்வெளிப்பாடுதான் எனது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட கஞ்சா சுருள் நாடகமாகும். இதன் போலியான சம்பவங்கள் குறித்து நான் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளேன். எனது ஊடகச் செயற்பாடுகள் தொடரும். இதை ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் அதிகாரம் மூலம் தடுத்துவிட முடியாது எனவும் புவி ரஹ்மத்துல்லா அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments