Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹட்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற ஆர்.டீ.ஏ லொறியுடன் தெஹிவளையிலிருந்து கொட்டக்கலைக்கு சென்ற முச்சக்கரவண்டி மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியுடன் இரண்டு பேர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் கிளங்கன் வைத்தியசாலைகக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் யோகராஜன் ரமேஷ் குமார் (வயது 22). இவர் தெஹிவளை கலுபோவில பகுதியைச் சேர்ந்தவராவார்.
முச்சக்கரவண்டியில் 5 வயது சிறு குழந்தையும் பயணித்துள்ளது. சிறுகுழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இவர்கள் தீபாவளிக்காக கொட்டக்கலை பிரதேசத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நேர்ந்துள்ளது. குறித்த லொறியின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments