மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட வலையிறவு பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறித்த பாலம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் இந்த பிரதான பாலத்தை, காலை 10.00 மணியளவில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.அதாஉல்லா வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், முன்னாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் றிட்டா ஐ ஒசில்லிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: