Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக்கொண்ட பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



இதன்போது உயர் கல்வி அமைச்சின் செயலாளர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,வைத்திய பீட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

உயர் கல்வி அமைச்சின் சுமார் 299 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வைத்திய பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்தார்.


வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை வைத்தியசாலையில் மேற்கொள்ளும் வகையில் இந்த விடுதி அமைக்கப்படவுள்ளது.










Post a Comment

0 Comments