மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை இரவு வீடு ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நகரின் பெய்லி வீதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 10 அரை பவுண் தங்க நகைகள்,கையடக்க தொலைபேசி ஒன்று,ஐபோர்ட் ஒன்று உட்பட சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்படடுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் உள்ளோர் உறங்கிகொண்டிருந்தவேளையில் குளியலறையின் ஜன்னல்கள் ஊடாக கம்பிகளை கழட்டிக்கொண்டு உள் நுழைந்து கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments