Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை பாராட்டும் ரமீஸ்ராஜா


டெல்லி, அக்.22 (டி.என்.எஸ்) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தரமானது என்று முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரமீஸ்ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. முதல் 3 ஆட்டங்களும் ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை கொடுத்தது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று ஆட்டங்களின் இந்தியா ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் இரண்டு போட்டியிலும் வெற்றி கண்டுள்ளது.



இந்த நிலையில் இந்த போட்டி தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ரமீஸ்ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:



ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடக்கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.



ஆனால் இந்த போட்டி ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமையும் என்று நான் நினைக்கிறேன். இந்த போட்டி தொடரில் தரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை நாம் பார்க்க முடிகிறது.



இருப்பினும் பந்து வீச்சில் இந்திய அணி சற்று திணறுகிறது எனலாம். 2–வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்களை குவித்த பிறகும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யாதது ஆச்சரியம் அளித்தது. சில இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான பார்மில் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி அதிக அளவில் ரன் குவிக்க முடிகிறது.



இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments