கல்முனை பிரதான வீதியுடன் இணையும் பிரதான பாதையான அம்மன் கோவில் வீதியில் உள்ள வடிகாண் அடைப்பின் காரணமாக நீர் வடிந்தொடுவது தடை பட்டு நீர் தேங்கி உள்ளது. இது தொடர்பின் கல்முனை மாநகர சபைக்கு அவ்வீதி வியாபாரிகளும், பொது மக்களும் அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் கல்முனை தமிழர் நலன் விரும்பிகளினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் கவனதிற்க்கு கொண்டு செல்லப்பட்டதினை அடுத்து அவ்விடத்துக்கு வருகை தந்த மாகாண சபை உறுப்பினர் அவர்கள் கல்முனை மேயரின் கவனதிற்க்கு கொண்டு செல்வதாகவும், அப்போதும் துப்பரவு பணிகள் நடைபெறவில்லையாயின் மாகாண சபையின் கவனதிற்க்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.
|
இவ்வீதியில் பிரபல பாடசாலை ஒன்றும், மூன்று தனியார் கல்லூரிகளும் உள்ளது. தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை பராமுகமாக இருப்பதாக கல்முனை வாழ் தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இப்பிரதேசத்தில் நீர் தேங்கியுள்ளதால் தூர் நாற்றமும், டெங்கு, மற்றும் தொற்று நோய்களும் ஏற்படக்கூடிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனை மாநகர சபையில் எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வேண்டுகோளுக்கு இணங்க துப்புரவாக்கும் பணிகள் இடம் பெற்றன.
|
0 Comments