Home » » மட்டக்களப்பு செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுகள்

மட்டக்களப்பு செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுகள்

மட்டக்களப்பு செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் 36வது வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மெதடிஸ்த பாலர் பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பாடசாலை கொடியை ஏற்றிவைத்து நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பாலர் பாடசாலை சிறுவர்,சிறுமிகளின் ஒலிம்பிக் தீபம் ஏற்றல், அணிநடை, பாடசாலை கீதம் இசைத்தல், உடற்பயிற்சி, மற்றும் மேற்பிரிவு, கீழ்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பன பார்ப்போரை கவரும் வகையில் நிகழ்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செங்கலடி மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருள் திரு. எஸ்.எஸ்.ரெரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக களுவன்கேணி சபைக்குரு அருள் திரு.பி.அருள்ராஜ் அவர்களும், கல்குடா வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பி.இளங்கோ அவர்களும், செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபர் திரு.கே.அருணாசலம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |