சென்னை, அக்.22 (டி.என்.எஸ்) புதுமுக இயக்குநர் நேசன் இயக்கத்தில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் போலீஸாக நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளதால் இப்படத்தின் மீது பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படம் குறித்து எந்த புர்மோஷன் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஜில்லா படத்தின் டாக்கி போஷன் முடிவடைந்ததையடுத்து, பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க முடிவு செய்த இயக்குநர் அதற்காக ஜப்பானை தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் ஒரு டூயட் பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக ஜாப்பான் கிளம்ப இருக்கிறது படக்குழு. விஜய், காஜல் அகர்வால், இயக்குநர் நேசன் அடங்கிய படக்குழுவினர் செல்கின்றனர்.
பொங்கல் வெளியீடு என அறிவித்து விட்டதால் முன்கூட்டியே படத்தை முடித்து தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப் போகிறார்களாம்.
0 comments: