Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

‘ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல அதுவாத்தான் வந்தது’ - பரபரப்பை கிளப்பிய தனுஷ்!

இந்த பீடிக்கு அந்த லேடி கேட்குதா..? என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தவர் நடிகர் தனுஷ்.


அப்படிப்பட்ட தனுஷ் தான் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் “நான் நல்ல புருஷன் இல்லை, ஆனால் என் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தனுஷ் பேசுகையில்.........

என்னை மாதிரி ஒரு ஸ்டூப்பிட்டான ஆளை யாருமே பார்த்திருக்க முடியாது. நானும் வாழ்க்கையில நெறைய தவறுகள் பண்ணிருக்கேன். அதனால் நெறைய கத்துக்கிட்டிருக்கேன். ஒரு சிலரோட மனசை காயப்படுத்திருக்கேன். அதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். ஒருசிலர் என்னோட மனசை காயப்படுத்திருக்காங்க, ஆனா அதுக்காக அவங்க வருத்தப்பட்டதே கெடையாது.

ஒரு நடிகனா நான் எப்படின்னு தெரியல, ஆனா என்னை ஒரு நல்ல கணவன்னு சொல்லிக்கவே முடியாது. ஆனா எல்லா விஷயங்களையும் கரெக்ட்டா பண்ணி நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றேன்.

என்றவரிடம் அவருடைய திருமண போட்டோவை காட்டி அதைப் பற்றிய ப்ளாஷ்பேக்கை கேட்டபோது “கல்யாணம் நடந்தப்போ எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல. ‘துள்ளுவதோ இளமை’ படத்தோட ஹிட்டுக்கப்புறம் என்னோட வாழ்க்கையில எல்லாமே வேகமா நடந்துப் போச்சு. திடீரென்று வந்த சக்சஸ், வாழ்க்கை, துணைவி எல்லாமே என்னைத் தேடி வந்தப்போ என்ன நடந்துன்னே புரியல.

என்றவர், போட்டோவைக் காட்டி இதுல எதுவுமே நான் கேட்கல, போட்டோவுல இருக்கிற என்னோட மனைவியையும் சேர்த்து எல்லாமே கடவுள் கொடுத்தது தான்” என்று தனது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் தனுஷ்.

ஏற்கனவே தனுஷூக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று கடந்த சில வாரங்களாக மீடியாக்கள் செய்திகளை பரப்பி வரும் நிலையில் ஐஸ்வர்யா தான் என்னைத் தேடி வந்தார், நான் அவரைத் தேடிப் போகவில்லை என்று கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணோட மனசு மட்டுமில்ல, ஆணோட மனசு கூட ஆழம் தான் போலிருக்கு...

Post a Comment

0 Comments