மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கம் மற்றும் சிறந்த முதியோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் இப் போட்டி நடத்தப்படுகிறது. இவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடத்தப்படவுள்ள சர்வதேச முதியோர்தின விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். சிறந்த கிராமிய முதியோர் சங்கம், சிறந்த சிரேஸ்ட பிரஜை ஆகியோரைத் தெரிவு செய்யும் வகையில் நடத்தப்பட்ட இவ் நேர்முகப்பரீட்சையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலுமிருந்து 14 கிராமிய முதியோர் சங்கங்களும், 14 சிரேஸ்ட பிரஜைகளும் பங்குபற்றியிருந்தனர்.
0 Comments