Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீர்கொழும்பில் இரு கொள்ளையர்கள் கைது

நீர்கொழும்பில் இரு கொள்ளையர்கள் கைது




நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்றையதினம் (26) நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் எத்துகால சந்திக்கு அருகில் இருவர் கைதாகியுள்ளனர். 

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இருவரும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிலுள்ள, வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தகநபர்கள் வழங்கிய தகவல்களின் படி இவர்களால் கொள்ளையிடப்பட்ட தங்கசங்கிலி, பெண்டன், கைகடிகாரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு எத்துகால பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

Post a Comment

0 Comments