Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் 13 வயது மாணவி கர்ப்பம்: காரணமான இளைஞன் கைது


கொழும்பில் 13 வயது மாணவி கர்ப்பம்: காரணமான இளைஞன் கைது


கொழும்பு மோதரை பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவியை ஏழு மாத கர்பிணியாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி மோதரை பொலிஸார் கைது செய்துள்ளதாக நிலையப் பெறுப்பதிகாரி பிரதான இன்ஸ்பெக்ரர் நிலுபுல் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரும் இந்த மாணவியும் காதலர்கள் எனவும், மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது சந்தேகநபர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கியதாக நிலையக் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் பத்மலாத் தெரிவித்தார்.
மாணவியான தன் மகள் கர்ப்பமடைந்ததை அறிந்த பெற்றோர் பிரதேச வாசிகள் இதனை அறிந்து விடுவார்கள் எனப் பயந்து வேறு பகுதியில் விடொன்றில் மகளை வைத்து பாதுகாத்ததாக இன்ஸ்பெக்ரர் பத்மயால் தெரிவித்துள்ளார்.
ஏழு மாதம் நிறைந்த கர்ப்பிணி மாணவியை அரச வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றால் வைத்தியர்கள் கேள்வி கேட்பார்க்ள எனப் பயந்து தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்றதாகவும்,
அந்த வைத்திய நிலைய வைத்தியர் பொலிஸ் சான்றிதழ் கொண்டு வருமாறு கூறியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பத்மலால் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தான் இந்த யுவதியை திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் சந்தேக நபர் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமடைய செய்ததால் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இன்ஸ்பெக்ரர் பத்மலால் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments