Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து: 20 பேர் பலி

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து: 20 பேர் பலி

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை இருபது சடலங்களை இந்தோனேசிய ஜாவா தீவு வாசிகள் மீட்டுள்ளனர்.சம்பவத்தின் போது படகில் 120 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் ஜோர்தான், லெபனான், மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பயணித்த அனைவரும் மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments