விமானம் மூலம் லண்டனுக்கு கடத்த முயற்சி: ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்
மும்பை விமான நிலைய சுங்கத்துறை உதவி கமிஷனர் ரிஷியாதவ் தலைமையிலான குழுவினர், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு லண்டனுக்கு விமானம் மூலம் அனுப்ப இருந்த இரண்டு பார்சல்களில் 25 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த கூரியர் நிறுவன ஏஜெண்டை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, போதைப்பொருளை கூரியர் நிறுவனத்திற்கு கொடுத்தனுப்பிய நபரை கைது செய்தனர். ஆனால் அவரது பெயர் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
0 Comments