அதிவேகப் படகில் ராமேஸ்வரம் சென்று இறங்கிய ஈழத் தமிழரால் பரபரப்பு
கடற்பரப்பில் கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அதிவேகப் படகு ஒன்றில் ராமேஸ்வரம் அருகே மர்ம நபர் ஒருவர் சென்றிறங்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் கடற்படைக்கும் கூட தெரியாமல் அதிவேகப் படகு ஊடுருவியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு பதுங்கியிருந்த இலங்கை மன்னார் - பேசாளையைச் சேர்ந்த செல்லகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாம் திருச்சியில் தங்கியிருப்பதாகவும் அடிக்கடி இலங்கைக்கு கடல்வழியே படகில் சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
0 Comments