Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பிணை மனு நிராகரிப்பு

 


கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சல ரத்னாயக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் விசாரணைகள் இடம்பெறுவதால் பிணை கோரிக்கையை ஆராய முடியாதென குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் துஷார உபுல்தெனிய நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments