பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் மற்றும் பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணை நிறைவடைவதற்குள் மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சீனாவின் நன்கொடையின் கீழ் இலங்கை குறித்த சீருடை துணிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவை உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
அதேசமயம், மாணவர்களுக்கான பாடப்புத்தகம் 3 ம் தவணை நிறைவடைவதற்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments