Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாரதி அனுமதிப்பத்திரம் பெறக் காத்திருப்போருக்கான அறிவிப்பு - ஏற்படவுள்ளது மாற்றம்!

 மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்கள் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தன.

திருத்தங்களுக்கான ஆராய்வு

சாரதி அனுமதிப்பத்திரம் பெறக் காத்திருப்போருக்கான அறிவிப்பு - ஏற்படவுள்ளது மாற்றம்! | Driving License Issue Department Motor Transport

அதற்கமையவே மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறக் காத்திருப்போருக்கான அறிவிப்பு - ஏற்படவுள்ளது மாற்றம்! | Driving License Issue Department Motor Transport

மேலும் குறித்த கலந்துரையாடலின் போது, மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்

Post a Comment

0 Comments