Home » » விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி நான்கு வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு காட்டில் மீட்பு!

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி நான்கு வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு காட்டில் மீட்பு!


 மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகிய போது அவர் இவர்களைக் கண்டதும் பாலா காட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார்.

இவ்வாறான நிலையில் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானித்து வந்த  பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவகர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்,  பாலாவை மடக்கிபிடித்து நோய்காவு வண்டி சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

பாலா கடந்த 4 வருட காலமாக காட்டிலுள்ள பழங்களை உண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஜனநாயக் போராளிகள் கட்சி மட்டுமாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |