அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்யத் தயங்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
வாழ்வாதார அழிப்பு
மேலும் உரையாற்றிய அவர், “சர்வதேச நாணய நிதியம் தற்போது இலங்கையின் எதிரியாக காணப்படுகிறது.
கிட்டத்தட்ட 3.5 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கான அளவுகோல்களை நிறைவேற்றியதன் பின்னர் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அதிபர் இவ்வாறு பயணித்தால் அவரை பதவி நீக்கம் செய்ய தயங்க மாட்டோம்” - என்றார்.
0 comments: