Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தாதீர்கள் : பிரசன்ன ரணதுங்க!

 


பாடசாலைகளுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பெற்றோர்கள் வேதனை அடைவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறான உரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (S.J.B) - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பேசுகின்றார். அரச பயங்கரவாதத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல சேதங்கள் ஏற்பட்டன. றோயல் கல்லூரி மாணவர்களுக்கும் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறு நடக்கும்போது கல்வி அமைச்சர் எடுக்கும் முடிவு என்ன?

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.LP.P) - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நேற்றும் இவர் உரையாற்றினார். பாடசாலைகளுக்கு அருகில் போராட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்பதற்கே பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். பாடசாலைகளுக்கு முன் போராட்டங்களை நடத்தும் போது பெற்றோர்களும் வேதனை அடைகின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் வலியை உணர்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச (S.J.B) - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதன் அடிப்படையில் இந்த நாட்டின் நீதித்துறையில் தலையிடுவது போன்ற வேலைத்திட்டங்களை இந்த பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் புகைப்படமாக படம் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை இருக்கிறது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.L.P.P) - கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இவர் பாராளுமன்றத்திற்கு அதிகாலையில் வந்து பிரசங்கம் செய்கின்றார். ஒரு தடவை மருந்து இல்லை என்றும், இன்னொரு தடலை மற்றொன்றும்சொல்கிறார். எதிர்க்கட்சிகள் தங்கள் விருப்பப்படி பாராளுமன்றத்தை செய்ய விடாதீர்கள்.

Post a Comment

0 Comments