கடந்த 20ஆம் திகதி பிற்பகல் புறக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற கல் வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்களாவர். சம்பவம் தொடர்பில் புறக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 comments: