மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜா மாவத்தையில் 10 கிராம் 750 மில்லிகிராம் நிறையுடைய 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருத்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையை அடுத்தே குறித்த சந்தேகச நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப் பொருள் வர்த்தகத்தின் முலமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25,000 ரூபா பணமும் அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், 61 வயதுடையமாளிகவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரை நேற்றைய தினம் மாளிகாகந்தை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவர் 10 கிராம் 830 மில்லி கிராம் நிறையுடைய 'ஐஸ்' போதை பொருளுடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொடை பகுதியிலும் 6 கிராம் 700 மில்லி கிராம் நிறையுடைய 'ஐஸ்' போதைப்பொருளுடன் 45 வயதுடைய பத்தரமுல்லையைச் சேர்ந்த ஆணொருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
0 Comments