Home » » பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் - முழு விபரம் வெளியீடு

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் - முழு விபரம் வெளியீடு


 பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக மணிக்கு 75 மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர்.

ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து பிரித்தானியாவின் வடக்கே கிழக்கு நோக்கி நகரும். இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என கூறுகின்றனர்.

மேலும், வியாழன் இரவு பிரித்தானியாவை நோக்கி நகர்ந்த புயல் வெள்ளிக்கிழமை காலை பிரித்தானியாவின் வடக்குப் பகுதிகளை தாக்கும் என்றே தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்று - அதிக மழை

பிரித்தானியாவை தாக்கப்போகும் ஓட்டோ புயல் - முழு விபரம் வெளியீடு | Storm Otto Met Office Warns Hits Uk

ஓட்டோ புயல் காரணமாக பிரித்தானியாவில் பலத்த காற்று மற்றும் அதிக மழை காணப்படும். ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதிகள் சில மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளில் 75 மைல் வேகத்திற்கு அதிகமாக காற்று வீசக்கூடும்.

பலத்த காற்று வீசும் இரண்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்புகள் அதிகள், 

அதே போல் வடகிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காற்று வீசக்கூடும்.

சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஓட்டோ புயல் காரணமாக மேற்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் 40-50 மிமீ மழை பெய்யக்கூடும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |