தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், வேதனம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு வேதனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் வேதனம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திருத்தம் செய்து அந்த சுற்றறிக்கையை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அது பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
0 comments: