Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கார் ஒன்றும் பஸ் ஒன்றும் புகையிரதத்துடன் மோதி விபத்து : மூவர் காயம் !

 


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று (பெப் 20) காலை கார் ஒன்றும் பஸ் ஒன்றும் புகையிரதத்துடன் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சும் காரும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி அறிவியல் நகர் நோக்கி புகையிரதம் பயணித்த போது புகையிரத கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு பின்னால் சென்ற பஸ் குறித்த வாகனத்தின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவர் கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Post a Comment

0 Comments