கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் நேற்று மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன
0 comments: