Home » » பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்



பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் - சிறிதரன் தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் தேசியக் கொடியினை வலயக் கல்விப் பணிப்பாளர்  சிவானந்தம் - சிறிதரன் ஏற்றி வைக்க வலயக் கொடியினை நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் தனுசியா - ராஜசேகர் என்பவரால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம், இறை வழிபாடு, வரவேற்புரை என்பன இடம்பெற்றன. 75 ஆவது சுதந்திர தினத்தினை நினைவு கூறுமுகமாக வலயக் கல்விப் பணிப்பாளர் சிறப்புரையினை ஆற்றினார். எமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தினத்தில் கல்விப்புலத்தில் கடமையாற்றும் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான, சவால்களை எதிர்கொள்வதற்கான தரமான கல்வியினை வழங்கி நாட்டுக்குப் பொருத்தமான நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனவும், நாங்கள் அனைவரும் இதன்பால் ஒன்றாகப் பயணம் செய்து வெற்றி கொள்வதற்கான திடசங்கற்பம் பூணவேண்டும் எனவும் தனது விசேட உரையில் குறிப்பிட்டார். 
இதனைத் தொடர்ந்து பயன்தரு மரங்கள் வலயத்தில் நடப்பட்டதுடன் நிகழ்வின் நன்றியுரையினை திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜெயந்திமாலா - பிரியதர்ஷன் நிகழ்த்தினார். 
இந் நிகழ்வில் வலயக் கணக்காளர், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், கல்விசாரா உத்தியோகஸ்த்தர்கள் கலந்து நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
































 




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |