அஸ்ஹர் இப்றாஹிம்
"துவிச்சக்கரவண்டி ஓட்டமா மூலமாக மீள் காடாக்கம்" என்ற பாரியதொரு சூழலியல்சார் எண்ணக்கருவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் CYCLING GREEN குழுமத்தின் துவிச்சகரவண்டி ஓட்டம் இன்று திருகோணமலையில் இருந்து கல்முனை வரை ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது மூதூரில் இயங்கும் மூதூர் ரைடர்ஸ் ஹப் (MUTUR RIDERS HUB), எலைட் அகடமி (ELITE ACADEMY) , மூதூர் லயன்ஸ் கழகம் (Lions Club of Muthur United ) என்பன ஒன்றிணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு செய்தனர்.
இதன்போது 2000 இற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் அன்பளிப்பு செய்யப்பதோடு அவற்றை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான வழிகாட்டலும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முஹம்மட் றியாஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments: