அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தாய் சேய் நல சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில் 60 வயதை கடந்த பெண் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய் மற்றும் சேய் நலச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சுகாதார அமைச்சிடம் எந்த திட்டமும் இல்லை என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தாய் மற்றும் சேய் நலச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சுகாதார அமைச்சிடம் எந்த திட்டமும் இல்லை என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
0 comments: