Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாரதி அனுமதி பத்திரத்தில் புதிய மாற்றம்..! விரைவில் நடைமுறை

 


வாகன சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

அபராதங்களை விதிக்கும் முறை 

சாரதி அனுமதி பத்திரத்தில் புதிய மாற்றம்..! விரைவில் நடைமுறை | Vehicle License New System Sri Lanka

இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இந்த திட்டம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments