உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும்.
உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார்.
ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து அரச நிர்
வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கிராம அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியர்களின் கையொப்பமிடப்பட்ட படிவத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாரிடம் ஒப்படைப்பது அவசியமாகும். அந்தத் தகவலின்படி, ஓய்வூதிய அதிகாரிகள் தரவுக் கட்டமைப்பை புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதுவரை உறுதிப்படுத்தப்படாத ஓய்வூதியர்களின் தரவுகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம அலுவலர்கள் ஆவணங்களை பூர்த்தி செய்து மாவட்ட செயலாளரிடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் மேலும் தெரிவித்தார்.
0 comments: